லைஃப்ஸ்டைல்

தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்

Published On 2017-10-27 07:16 GMT   |   Update On 2017-10-27 07:16 GMT
மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. வெங்காயத்தில் ஊறுகாய் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புளி - எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் - அரை கிலோ
வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
வெந்தயப்பொடி- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்



செய்முறை :

வெங்காயத்தை நீளமாக நறுக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் புளியைச் சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இத்துடன் புளி பேஸ்ட், வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

எண்ணெய் சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.

சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி.

ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News