லைஃப்ஸ்டைல்

செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி

Published On 2017-09-06 07:20 GMT   |   Update On 2017-09-06 07:20 GMT
வயிறு உபாதை இருப்பவர்கள் இந்த பூண்டு புளிக்குழம்பை செய்து சாப்பிடலாம். இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - (சிறிய எலுமிச்சை அளவு )
சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) - 3 டீஸ்பூன்
தக்காளி - 2
வெங்காய கறி வடகம் - 1/4கப்

தாளிக்க :

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்.



செய்முறை :

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தனியாக வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியவுடன் சாம்பார் தூள் அல்லது குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கரைத்த புளியை சேர்த்து  கொதிக்க விடவும்.

இத்துனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பு திக்காகும் வரை அடுப்பை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காய கறி வடகத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பொரித்த வடகத்தை குழம்பில் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் குழம்பை இறக்கவும்.

சூப்பரான செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி.

செட்டிநாடு புளிக்குழம்பு இட்லி, தோசை, சாதம் அனைத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News