லைஃப்ஸ்டைல்

ஓணம் ஸ்பெஷல்: கேரளா பருப்பு பாயாசம்

Published On 2017-09-02 09:44 GMT   |   Update On 2017-09-02 09:44 GMT
கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு பாயாசம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பால் - அரை கப்
முந்திரி - ஒரு கைப்பிடி
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு



செய்முறை :

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கரைய நன்கு கெட்டியாக சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, முந்திரியைத் தூவினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News