லைஃப்ஸ்டைல்

வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி

Published On 2017-08-30 07:29 GMT   |   Update On 2017-08-30 07:29 GMT
சம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை சூப்பராக இருக்கும். இன்று வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 1/4 கிலோ,
மிளகு தூள் - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பூண்டு - 3 பல்,
கடுகு - தாளிக்க.



செய்முறை :

வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை தோல் நீக்கி நசுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெண்டைக்காய் நன்றாக வதங்கியதும் உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகு தூள் நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News