search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்டைக்காய் சமையல்"

    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    • வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவ குணம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 10

    தயிர் - 1 1/2 கப்

    சிவப்பு மிளகாய் - 4

    கடுகு - கால் தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    மசாலா அரைக்க

    சிறிய வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    பூண்டு - 2 பற்கள்

    தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

    செய்முறை

    வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை உப்பு சேர்த்து வறுக்கவும்

    மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிச்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் புளித்த தயிருடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்கவும்

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வறுத்த வெண்டைக்காய், தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்

    சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்

    • வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது.
    • நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 250 கிராம்

    கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி

    துருவிய தேங்காய் - கொஞ்சம்

    கொத்தமல்லி - கொஞ்சம்

    பச்சைமிளகாய் - இரண்டு

    பூண்டு - 2 பல்

    வெங்காயம் - ஒன்று

    இஞ்சி - ஒரு துண்டு

    தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி

    எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

    சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி

    மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி

    மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

    பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

    உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

    வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.

    இப்போது சூப்பரான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.

    ×