லைஃப்ஸ்டைல்

சூப்பரான செட்டிநாட்டு மொச்சை மண்டி

Published On 2017-08-10 07:23 GMT   |   Update On 2017-08-10 07:23 GMT
சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள செட்டிநாட்டு மொச்சை மண்டி சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மொச்சை - ½ கப்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 10 பல்
பச்சைமிளகாய் - 7
புளி - பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - ருசிக்கு ஏற்ப

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கு
கடுகு - ½ டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ½  டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
வர மிளகாய் - 1

செய்முறை :

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவம்.

புளியை கரைத்து கொள்ளவும்.

மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்த மொச்சையை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

அடுத்து சின்ன வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் வேக வைத்த மொச்சையை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். (மொச்சையில் ஏற்கனவே உப்பு உள்ளது)

இப்போது நன்றாக கொதிக்கும் போது மிதமான தீயில் வைக்கவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வரம போது அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான செட்டி நாட்டு மொச்சை மண்டி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News