லைஃப்ஸ்டைல்

புரதம் மிகுந்த சோயா - மஞ்சள் பூசணி சூப்

Published On 2018-03-30 04:11 GMT   |   Update On 2018-03-30 04:11 GMT
சோயா புரதம் மிகுந்தது என்பதால் ஏதாவது ஒரு விதத்தில் உணவுடன் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோயாவை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சோயா புரதம் மிகுந்தது என்பதால் ஏதாவது ஒரு விதத்தில் உணவுடன் கலந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். எல்லா வகை சூப்பிலுமே சோயா பவுடர், வெந்தயப்பொடி, இரண்டும் புரதத்துக்காவும், நார்ச்சத்துக்காகவும் சேர்க்கப்படலாம்.

தேவையான பொருட்கள் :

சோயா - 1/4 கப்,
மஞ்சள் பூசணி - 1 கப்,
[பாட்டி மசாலா] மல்லித்தூள் - 1 மேஜை கரண்டி,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1 மே.க,
[பாட்டி மசாலா] சிவப்பு மிளகாய்த்தூள் - 1/4 மே.க,
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதல் நாள் இரவே சோயா பீன்சை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய சோயா பீன்சை தண்ணீரை வடித்துவிட்டு நன்கு வேகவிடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் சோயாவுடன் சேர்த்து மஞ்சள் பூசணி துண்டுகள், [பாட்டி மசாலா] தனியாப்பொடி, [பாட்டி மசாலா] சீரகப்பொடி, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி ஆறவிடவும்.

ஆறியபின் சிறிது சோயாவை தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதியை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.

தனியாக வைத்த சோயாவை சேர்த்து கொதிக்கவிடவும்.

தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

கடைசியாக கொத்தமல்லிஇலை தூவி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

சூப்பரான சோயா சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News