லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் சோயா காய்கறி ஊத்தப்பம்

Published On 2018-03-07 03:02 GMT   |   Update On 2018-03-07 03:02 GMT
எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. இன்று சோயா பீன்ஸ் வைத்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சோயா பீன்ஸ் - அரை கப்,
கடலைமாவு - அரை மேஜைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை - அரை கப்,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
ப.மிளகாய், இஞ்சி, விழுது - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
துருவிய கேரட், முட்டை கோஸ் - ¼ கப்



செய்முறை :

புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோயா பீன்ஸ், முதல் நாள் இரவே ஊறவைத்து, மைய அரைத்து கொள்ளவும்

அடுத்த நாள் காலையில் கடலைமாவு, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தடிமனாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை அகியவற்றை தூவவும். தோசைக் கரண்டியால் லேசாக அழுத்தி விடவும்.

ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான சோயா காய்கறி ஊத்தப்பம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News