லைஃப்ஸ்டைல்

சிறந்த காலை உணவு வல்லாரைக் கஞ்சி

Published On 2018-03-03 05:34 GMT   |   Update On 2018-03-03 05:34 GMT
ஞாபக சக்திக்கு தினமும் உணவில் வல்லாரைக்கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வல்லாரைக்கீரையை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வல்லாரைக் கீரை - ஒரு கப்,
பச்சரிசி - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
பூண்டு - 10 பல்,
உப்பு - தேவைக்கு.



செய்முறை :

வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சரிசியை மிக்சியில் போட்டு ரவையாக உடைத்தெடுக்கவும்.

குக்கரில் பொடித்த அரிசி குருணை, கீரை, பூண்டு, தேங்காய்த் துருவல், உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் மூடியை திறந்து மசித்து பருகலாம்.

சூப்பரான இது ஒரு சிறந்த காலை நேர உணவு.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News