லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த வாழைப்பூ சப்பாத்தி

Published On 2018-02-26 05:30 GMT   |   Update On 2018-02-26 05:30 GMT
வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வாழைப்பூவை வைத்து சூப்பரான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - கால் கிலோ
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்
நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 7
பச்சைமிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
சீரகம் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயிர் - 2 டீஸ்பூன்



செய்முறை :

சின்ன வெங்காயம், பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும்.

பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும்.

சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். வாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.

இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்த சப்பாத்திகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான வாழைப்பூ சப்பாத்தி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News