லைஃப்ஸ்டைல்

உடலுக்கு சத்தான ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட்

Published On 2018-01-24 06:31 GMT   |   Update On 2018-01-24 06:31 GMT
ராஜ்மா, ஸ்வீட்கார்னின் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் பயன்படுத்தி சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

ராஜ்மா - 1 கப், 
ஸ்வீட்கார்ன் - 1 கப், 
தக்காளி - 1
வெங்காயம் - 1,
வெங்காயத்தாள் - சிறிதளவு,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு, 
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், 
புதினா இலை - சிறிது.



செய்முறை :

வெங்காயம், தக்காளி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். 

ஸ்வீட்கார்னையும் வேகவைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, வெங்காயம், தக்காளி, வெங்காயத்தாள், எலுமிச்சை சாறு [பாட்டி மசாலா] மிளகுத்தூள், புதினா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

அருமையான ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி. 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News