லைஃப்ஸ்டைல்

சுரைக்காய் - கொத்தமல்லி தோசை

Published On 2018-01-02 06:27 GMT   |   Update On 2018-01-02 06:27 GMT
சுரைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சுரைக்காய், கொத்தமல்லி வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 1 டம்ளர் 
சுரைக்காய் - 150 கிராம் 
வரமிளகாய் - 4 
உப்பு - சுவைக்கேற்ப 
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கப்



செய்முறை :

கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை 4 மணி நேரம் நன்கு ஊற வைத்து கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

சுரைக்காயை தோல் நீக்கி கேரட் துருவியல் துருவிக்கொள்ளவும். 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை மற்றும் துருவிய சுரைக்காய் அனைத்தையும் அரைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சத்தான சுவையான சுரைக்காய் - கொத்தமல்லி தோசை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News