லைஃப்ஸ்டைல்

கோதுமை மாவு வெங்காய பணியாரம்

Published On 2017-12-26 04:37 GMT   |   Update On 2017-12-26 04:37 GMT
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை மாவை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - அரை கப்
ரவை - 1/4 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1/2 இணுக்கு
பெருங்காயம் - சிறிதளவு
வெங்காயம் - 2.



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கோதுமை மாவு, ரவையையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஒன்றாகத் திரிக்கவும்.

அரைத்த கோதுமை மாவு, ரவை கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசிமாவு, தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வதக்கிய பொருட்களை கோதுமை மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுப்பில் குழிப்பணியாரச்சட்டியை வைத்து எண்ணெய் விட்டு கோதுமை மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சுவையான கோதுமை மாவு வெங்காய பணியாரம் தயார். 

மிளகாய்ப்பொடி, தக்காளி சட்னி, சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News