லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு சத்தான பாலக்கீரை - சோயா கிரேவி

Published On 2017-12-21 03:23 GMT   |   Update On 2017-12-21 03:23 GMT
சோயாவில் உள்ள குறைவான மாவுச்சத்தும், பாலக் கீரையில் உள்ள கால்சியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் உடலுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் : 

பாலக்கீரை - ஒரு கட்டு, 
சோயா உருண்டைகள் - 15, 
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், 
சீரகம் - ஒரு டீஸ்பூன், 
வெங்காயம் - 1, 
பச்சைமிளகாய் - 2, 
பால் - 4 டேபிள்ஸ்பூன், 
[பாட்டி மசாலா] கரம் மசாலா - அரை டீஸ்பூன், 
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை : 

பாலக்கீரையை நன்றாக கழுவி வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் சோயா உருண்டைகளைப் போட்டு, 10 நிமிடங்கள் வேகவிட்ட பிறகு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி, பிழிந்துகொள்ளவும். 

பாலக் கீரையுடன் பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்து, ஆறியதும், விழுதாக அரைத்துக்கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வதக்கவும். 

அடுத்து அதில் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா சேர்த்து, சோயா உருண்டைகளைப் போட்டு வதக்கவும். 

உப்பு சேர்த்துக் கிளறி, சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். 

சோயா வெந்ததும், கடைசியாக அரைத்த பாலக் விழுது சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவந்ததும், பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். பாலக்கீரை சேர்த்தவுடன் அதிகம் கொதிக்க விடக்கூடாது.

பாலக்கீரை - சோயா கிரேவி ரெடி. 

சப்பாத்தி, நான், ரொட்டி, தோசையுடன் சாப்பிட ஏற்றது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News