லைஃப்ஸ்டைல்

மக்காச்சோளம் - தக்காளி சாலட்

Published On 2017-11-20 05:46 GMT   |   Update On 2017-11-20 05:46 GMT
மக்காச்சோளத்தில் சாலட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மக்காச்சோளத்தில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மக்காச்சோளம் - 2 கதிர்
தக்காளி - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மக்காச்சோள விதைகளை உதிர்த்து சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த மக்காச்சோளம், தக்காளி, வெங்காயத்தை போட்டு நன்றாக கிளறவும்.

அதனுடன் மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து மற்றொரு முறை நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான மக்காச்சோள சாலட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News