லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான கொள்ளு மசியல்

Published On 2017-11-14 05:22 GMT   |   Update On 2017-11-14 05:22 GMT
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். சப்பாத்திக்கு அருமையான கொள்ளு மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொள்ளு - அரை கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 10 பல்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.



செய்முறை :

கொள்ளுவை 4 மணி நேரம் ஊறவையுங்கள்.

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஊற வைத்த கொள்ளுவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகிய மூன்றையும் சேர்த்து குக்கரில் போட்டு அதனுடன் சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு 7 விசில் விட்டு வேகவைக்க வேண்டும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அத்துடன் உப்பு, கொத்தமல்லித்தழையை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து குக்கரில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி வையுங்கள்.

சூப்பரான கொள்ளுப் பருப்பு மசியல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News