லைஃப்ஸ்டைல்

உடலுக்கு வலுசேர்க்கும் நெல்லிக்காய் சூப்

Published On 2017-11-02 05:23 GMT   |   Update On 2017-11-02 05:23 GMT
நெல்லிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நெல்லிக்காயை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் - 10,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - தேவைக்கு,
காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
கறிவேப்பிலை - கைப்பிடியளவு.



செய்முறை :

நெல்லிக்காயை கழுவி கொட்டைகளை நீக்கி விட்டு சதைப்பகுதியை தனியாக எடுக்கவும்.

அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

பிறகு நெல்லிச்சாறுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பருகலாம்.

நெல்லிக்காய் சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News