லைஃப்ஸ்டைல்

சத்தான ஸ்நாக்ஸ் கடலைப் பருப்பு சுண்டல்

Published On 2017-09-28 03:32 GMT   |   Update On 2017-09-28 03:32 GMT
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் ஏதாவது ஒரு பருப்பு வகையை சாப்பிடுவது நல்லது. இன்று கடலைப்பருப்பில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு - ஒரு கப்,
பெருங்காயத்தூள் - சிட்டிகை,
கடுகு - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
தேங்காய்த் துருவல் - ஒரு  டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு தேவைக்கு.



செய்முறை :

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலைப் பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

கடலைப்பருப்பு நன்றாக ஊறிய பிறகு குக்கரில் வேக வைத்து எடுத்து தண்ணீரை வடிய விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் கடலைப் பருப்பு, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

சத்தான ஸ்நாக்ஸ் கடலைப் பருப்பு சுண்டல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News