லைஃப்ஸ்டைல்

வாயு தொல்லையை குணமாக்கும் பூண்டு லெமன் டிரிங்

Published On 2017-09-09 05:23 GMT   |   Update On 2017-09-09 05:23 GMT
வாயு தொல்லை, வயிறு கோளாறு இருப்பவர்கள் இந்த பூண்ட லெமன் டிரிங்கை குடித்தால் உடனடியாக நிவாரணம் பெறலாம். இந்த டிரிங்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பூண்டு - 3 பல்,
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
தண்ணீர் - ஒரு கப்.



செய்முறை :

பூண்டை நன்றாக தட்டி வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் பூண்டை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து பூண்டு சாறு இறங்கியதும் இறக்கி வடிகட்டவும்.

வடிகட்டிய பூண்டு சாறுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து பருகலாம்.

சூப்பரான பூண்டு லெமன் டிரிங் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News