லைஃப்ஸ்டைல்

வயிற்று உபாதைகளை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

Published On 2017-09-07 03:32 GMT   |   Update On 2017-09-07 03:32 GMT
வாய்வு தொல்லை, வயிற்று பிரச்சனைகளுக்கு இந்த நாட்டு மருந்து குழம்பு நல்ல தீர்வாக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெள்ளை கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - தேவையான அளவு
பரங்கி செக்கை - ஒரு நெல்லிக்காய் அளவு
சுக்கு - சிறிதளவு
பூண்டு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - சிறிதளவு
வெந்தயத்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து புளியை கரைத்து கொள்ளவும்.

வெள்ளை கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், பரங்கி செக்கை(நசுக்கியது), சுக்கு, பூண்டு இவை அனைத்தையும் நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

அடுத்து அதில் கரைத்த புளி கரைசல், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிவும் போது சிறிதளவு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

நல்ல சுவையுடன் கூடிய வாய்வு தொல்லைய நீக்கக்கூடிய குழம்பு ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News