லைஃப்ஸ்டைல்

சத்தான காலை உணவு சாமை வெஜிடபிள் உப்புமா

Published On 2017-09-02 03:31 GMT   |   Update On 2017-09-02 03:31 GMT
சிறுதானிய உணவை அடிக்கடி சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று சாமை அரிசி, காய்கறிகளை வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - ஒரு கப்,
வெங்காயம்  - ஒன்று,
கேரட் - ஒன்று,
நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை போட்டு மூன்று கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி போட்டு 15 நிமிடம் வேக விடவும். (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்).

நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News