லைஃப்ஸ்டைல்

தும்மல், இருமலைக் குறைக்கும் ஹெர்பல் டீ

Published On 2017-08-16 03:24 GMT   |   Update On 2017-08-16 03:24 GMT
தும்மல், சளி, தொண்டை வலி, இருமல், கபத்தைப் போக்கும் தன்மை கொண்டது இந்த ஹெர்பல் டீ. இன்று டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
தனியா - அரை டீஸ்பூன்,  
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
சுக்குப்பொடி  - ஒரு டீஸ்பூன்,
கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.

செய்முறை:

இரும்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் என ஒவ்வொன்றாகப் போட்டு எடுத்து, இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கும் போது கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, அரைத்த மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு 2 நிமிடம் கொதித்ததும் மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.

கருப்பட்டிக்கு பதிலாக தேனும் உபயோகிக்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News