லைஃப்ஸ்டைல்

செரிமானத்தை தூண்டும் கற்பூரவல்லி டீ

Published On 2017-08-11 03:30 GMT   |   Update On 2017-08-11 03:30 GMT
சளி, இருமல், தொண்டை வலி, செரிமானப்பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த கற்பூரவல்லி டீயை குடிக்கலாம். இன்று இந்த டீ செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தேயிலை - ஒரு டீஸ்பூன்,
கற்பூரவல்லி இலைப்பொடி - கால் டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக கொதித்து சாறு இறங்கியவுடன் வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பருகவும்.

சத்தான கற்பூரவல்லி டீ ரெடி.

பலன்கள்: வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஒமேகா 3, நார்ச்சத்து, மக்னீசியம், மாங்கனீஸ் நிறைந்துள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், இதய நோயாளிகள் அருந்தலாம். செரிமான மண்டலத்தை சீராக்கி, சிறுநீரகப் பாதைத் தொற்றைக் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News