லைஃப்ஸ்டைல்

நீர்ச்சத்து நிறைந்த பூசணி - நிலக்கடலை சாலட்

Published On 2017-08-09 05:27 GMT   |   Update On 2017-08-09 05:27 GMT
சிறுநீரகப் பிரச்சனை, பெப்டிக் அல்சர் இருப்பவர்கள் பூசணி - நிலக்கடலை சாலட்டை சாப்பிடுவது நல்லது. இன்று இந்த சாலட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெள்ளைப் பூசணி - பெரிய துண்டு,
நிலக்கடலை - 1 கைப்பிடி,
பச்சைமிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்,
உப்பு, மிளகு, கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை :

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெள்ளை பூசணிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

நிலக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெள்ளைப் பூசணித் துண்டுகளோடு, நிலக்கடலையைப் போட்டுக் கலக்க வேண்டும்.

அடுத்து அதில் பச்சைமிளகாய், உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லியைக் கலந்துச் சாப்பிடலாம்.

பலன்கள்: வைட்டமின் பி1, பி3, சி நிறைந்துள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். வேர்க்கடலை சேர்வதால், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News