லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி

Published On 2017-07-21 03:25 GMT   |   Update On 2017-07-21 03:25 GMT
உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இந்த பூசணிக்காய் தயிர் பச்சடியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் இது. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் - 200 கிராம்
தயிர் - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கடுகு, உளுந்து - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

துருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.

சூப்பரான பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி.

இந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.

பூசணிக்காயில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் பானகமாகக் குடிக்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News