லைஃப்ஸ்டைல்

இருமலுக்கு இதமான சுக்கு - கருப்பட்டி காபி

Published On 2017-07-17 03:35 GMT   |   Update On 2017-07-17 03:35 GMT
சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு - கருப்பட்டி காபி குடித்தால் விரைவில் பலன் கிடைக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 1 கப்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
கருப்பட்டி - 2 டேபிள் ஸ்பூன்

சுக்கு பொடிக்கு…

உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்.



செய்முறை :

* சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

* பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News