லைஃப்ஸ்டைல்

சத்தான காலை டிபன் கம்பு - பாசிப்பருப்பு பொங்கல்

Published On 2017-07-05 03:35 GMT   |   Update On 2017-07-05 03:35 GMT
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கம்பு, பாசிப்பருப்பு வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பு - 100 கிராம்,
பாசிப்பருப்பு - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 1,
சீரகம், மிளகு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி துண்டு - சிறிதளவு,
எண்ணெய் - 20 கிராம்,
நெய் - 10 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.



செய்முறை :

* ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு ஓரிரண்டாக உடைத்து, சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

* பாசிப்பருப்பு, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த பின் வேக வைத்த கம்பு, உப்பு, பருப்பு கலவையுடன் சேர்த்து, நெய் விட்டு மசித்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

* சத்தான டிபன் கம்பு - பாசிப்பருப்பு பொங்கல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News