லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் கைக்குத்தல் அரிசி கிச்சடி

Published On 2017-06-14 03:36 GMT   |   Update On 2017-06-14 03:36 GMT
கைக்குத்தல் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கைக்குத்தல் அரிசியை வைத்து சத்தான காலை நேர டிபன் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கைக்குத்தல் அரிசி குருணை - 300 கிராம்
பட்டாணி - 100 கிராம்
ராஜ்மா - 50 கிராம்
முந்திரி, பாதாம் - 50 கிராம்
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 3
சோம்பு, பட்டைப்பொடி - தலா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, நெய் - சிறிதளவு



செய்முறை :

* ராஜ்மா, பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கைக்குத்தல் அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டைப்பொடி போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த பச்சை பட்டாணி, ராஜ்மாவை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

* ஒரு கப் குருணைக்கு 3 கப் தண்ணீர் வீதம் ஊற்றி உப்பு சேர்த்து கொதி வந்ததும் கைக்குத்தல் குருணையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிச்சடியாக கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* கைக்குத்தல் அரிசி கிச்சடி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News