லைஃப்ஸ்டைல்

சத்தான சூப்பரான கேரட் ஸ்டஃப்டு சப்பாத்தி

Published On 2017-06-05 05:21 GMT   |   Update On 2017-06-05 06:03 GMT
கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது குழந்தைகளுக்கு சத்தான கேரட் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்,
கேரட் - 200 கிராம்
கொத்தமல்லித் தழை - அரை கட்டு,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
நெய் - எண்ணெய் கலவை,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* கேரட்டை துருவி வைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் கேரட் விழுது சிறிதளவு வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்திகளாக தேய்க்கவும்.

* தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* சூப்பரான கேரட் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

* சூப்பரான கேரட் ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News