லைஃப்ஸ்டைல்

சூப்பரான காலை டிபன் அரிசி மாவு ரொட்டி

Published On 2017-06-01 03:30 GMT   |   Update On 2017-06-01 03:30 GMT
எப்போதும் தோசை சாப்பிட்டு அலுத்தவர்கள் அரிசி மாவு ரொட்டி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரொட்டியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்,
வெங்காயம் -1,
பச்சைமிளகாய் - 1,
கேரட் துருவல் - 2 ஸ்பூன்,
உப்பு, கொத்தமல்லி, தண்ணீர், நல்லெண்ணெய் - சிறிதளவு.



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவில், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி, கேரட் துருவல், கறிவேப்பிலை கலந்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகல்லில் வட்டமாகத் தட்ட வேண்டும்.

* சுற்றி ஓரங்களில் நல்லெண்ணெயை ஊற்றி, திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுக்க வேண்டும்.

* சூப்பரான அரிசி மாவு ரொட்டி ரெடி.

* இதை, சாம்பார், வத்தக் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News