லைஃப்ஸ்டைல்

சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்

Published On 2017-05-06 03:32 GMT   |   Update On 2017-05-06 03:32 GMT
காலையில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தானதும் விரைவில் செய்யக்கூடியது இந்த சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சுட்ட சப்பாத்தி - 2
பெரிய வெங்காயம்  - 1
கேரட்  - 1
முட்டைகோஸ்  - சிறிய துண்ட
குடமிளகாய் - பாதி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பச்சைமிளகாய்  - 1
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்



செய்முறை :

* வெங்காயம், கேரட், முட்டைகோஸ், இஞ்சி, குடமிளகாய், கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கிய பின்னர்வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைகோஸ், கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* காய்கறிகள் முக்கால் பதத்துக்கு வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும்.

* இந்தக் கலவையை சப்பாத்தியின் ஒரு ஓரத்தில் வைத்து அப்படியே சுருட்டினால் வெஜ் சப்பாத்தி ரோல் தயார்.

குறிப்பு:

விருப்பப்பட்டால் கேரட் சேர்க்கும் போது பீன்ஸ், காளானையும், இறுதியாக சிறிது கரம்மசாலா தூளும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்டஃபிங்கை தோசை, பிரெட் நடுவில் வைத்தும் சாப்பிடலாம்

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News