லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு தயிர் சாதம்

Published On 2017-04-17 03:36 GMT   |   Update On 2017-04-17 03:36 GMT
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பு - ஒரு கப்,
பால் - ஒன்றரை கப்,
தயிர் - ஒரு கரண்டி,
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2,
இஞ்சி - ஒரு துண்டு,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.



செய்முறை:

* பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிவைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் இரண்டு முறை அடித்து, பிறகு புடைத்து, தோலை நீக்கவும். (ஒரு தட்டில் பரத்தி, ஊதினால் தோல் நீங்கிவிடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும்.

* உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, அதில் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் கம்பு சாதத்தில் சேர்க்கவும்.

* கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

* கம்பு தயிர் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News