லைஃப்ஸ்டைல்

சரும பொலிவுக்கு பப்பாளி - ஆரஞ்சு ஜூஸ்

Published On 2017-04-12 03:30 GMT   |   Update On 2017-04-12 03:30 GMT
பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் சேர்த்து மூன்று பழங்களிலும் சத்துக்கள் அதிகம் உள்ளன. இத்தகைய பப்பாளி ஆரஞ்சு வாழைப்பழம் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பப்பாளி பழ துண்டுகள்  - 1 கப்
ஆரஞ்சு  - 1
வாழைப்பழம் - 3 துண்டு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - சிட்டிகை
தேன்- தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை



செய்முறை :

* ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* மிக்சியில் ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை சாறு, பப்பாளி பழத்துண்டுகள், வாழைப்பழம், உப்பு, தேன், ஐஸ்கட்டி சேர்த்து மிக்ஸியில் இட்டு அடித்துக் கொள்ளவும்.

* அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி மிளகுத்தூள் தூவி பருகலாம்.

* பப்பாளி ஆரஞ்சு ஜூஸ் ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News