லைஃப்ஸ்டைல்

மும்பை ஸ்பெஷல் மேத்தி காக்ரா

Published On 2017-04-10 03:38 GMT   |   Update On 2017-04-10 03:38 GMT
மும்பை, டெல்லியில் இந்த மேத்தித காக்ரா மிகவும் பிரபலம். செய்வது மிகவும் எளிது. சுவையாக இருக்கும். இன்று இந்த மேத்தி காக்ரா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலை மாவு, கோதுமை மாவு - தலா 100 கிராம்,
பொடித்த ஓமம் - ஒரு டீஸ்பூன்,
வெந்தயக் கீரை - 2 கட்டு,
மிளகாய்த்தூள் - எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

* வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் கடலை மாவு பொடித்த ஓமம், வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து... சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* மாவை சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒவ்வொரு சப்பாத்தியாகப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுக்கவும்.

* சூப்பரான சத்தான மேத்தி காக்ரா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News