லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் - புதினா ஜூஸ்

Published On 2017-04-03 07:32 GMT   |   Update On 2017-04-03 07:32 GMT
வெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள் லெமன் - புதினா ஜூஸ் குடிக்கலாம். இன்று இந்த லெமன் - புதினா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எலுமிச்சை - ஒன்று
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கு
புதினா - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு (2 அங்குல அளவு)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 300 மில்லி



செய்முறை:

* புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

* இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.

* எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.

* இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும்.

* அரைத்த விழுதுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

* பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும்.

* சூப்பரான லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News