லைஃப்ஸ்டைல்

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

Published On 2017-03-16 05:49 GMT   |   Update On 2017-03-16 05:49 GMT
மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் குதிரைவாலியில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இன்று குதிரைவாலி கொத்தமல்லி சாதம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி [ Barnyard millet ] - அரை கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி தழை - அரை கட்டு
மிளகு - சீரகபொடி - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

சீரகம் - அரை ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்



செய்முறை :

* பூண்டு, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும். பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும். விசில் போனவுடன் குக்கரை திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து ஆற விடவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து மீதமுள்ள நல்லெண்ணெயை விட்டு சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அதில் குதிரைவாலி சாதத்தை போட்டு அதனுடன் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

* சத்தான குதிரைவாலி கொத்தமல்லி சாதம் ரெடி.

* விருப்பமான பொரியல் அல்லது தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.

குறிப்பு :

கொத்தமல்லியை அரைத்தும் இதில் சேர்க்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News