லைஃப்ஸ்டைல்

சத்தான சிற்றுண்டி: சிறுதானிய சாலட்

Published On 2017-03-11 03:37 GMT   |   Update On 2017-03-11 03:37 GMT
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ண சிறந்த சத்தான மாலை சிற்றுண்டியான சிறுதானிய சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வேகவைத்த வரகு - 2 தேக்கரண்டி
வேகவைத்த பனி வரகு - 2 தேக்கரண்டி
வேகவைத்த தினை - 2 தேக்கரண்டி
முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி
முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி
முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
துருவிய கேரட் - 2 தேக்கரண்டி
இந்து உப்பு - 1சிட்டிகை,
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி



செய்முறை :

* பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

* வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

* மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ள வேண்டும்.

* சுவையான சிறுதானிய சாலட் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News