லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டஃப்டு பராட்டா

Published On 2017-03-01 03:38 GMT   |   Update On 2017-03-01 03:38 GMT
பன்னீரில் நம் உடலுக்கு தேவையான நல்ல பல சத்துகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பன்னீரை பயன்படுத்தி பராட்டா செய்வதை இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
துருவிய பன்னீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

* கோதுமை மாவை தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

* பன்னீரை கேரட் துருவியில் துருவியோ, அல்லது உதிர்த்துக் கொண்டோ அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ளவும். இது தான் பூரணம். இதை சப்பாத்திக்கு உள்ளே ஸ்டஃப்டு செய்ய வேண்டும்.

* எலுமிச்சையளவு உருண்டைகளாக சப்பாத்தி மாவை உருட்டிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து மாவைத் தொட்டுக் கொண்டு உள்ளங்கையளவு திரட்டி உள்ளே 1 தேக்கரண்டியளவு பன்னீர் கலவையை வைத்து மூடி மெலிதாக திரட்டிக் கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்த சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்.

* சூப்பரான பன்னீர் பராட்டா தயார்.
 
* ஊறுகாய், மற்றும் தயிருடன் சுவையான பன்னீர் பராட்டா ஜோராக இருக்கும். இதே போல் சீஸ் பராட்டாவும் செய்யலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News