லைஃப்ஸ்டைல்

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

Published On 2017-02-28 05:48 GMT   |   Update On 2017-02-28 05:48 GMT
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி சுண்டல் செய்து சாப்பிடலாம். இன்று சத்துக்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்,
சோம்பு - கால் டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
புதினா - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 3,
கரம்மசாலா தூள் - அரை ஸ்ஹபூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* கருப்பு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்த பின் குக்கரில் போட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதனுடன் வெந்த கொண்டைக்கடலை, தேவையான உப்பு, கரம்மசாலாதூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்....

* சூப்பரான மசாலா சுண்டல் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News