லைஃப்ஸ்டைல்

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

Published On 2017-01-23 06:49 GMT   |   Update On 2017-01-23 06:49 GMT
இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை டிரை பண்ணிப் பாருங்க.
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.

செய்முறை :

* கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

* வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை கொட்டவும்.

* கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவி கொதி வந்ததும் இறக்கவும். (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).

* சூப்பரான கத்தரிக்காய் சட்னி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News