லைஃப்ஸ்டைல்

சூப்பரான மாங்காய் - பருப்பு ரசம்

Published On 2016-12-05 03:28 GMT   |   Update On 2016-12-05 03:28 GMT
மாங்காய் ரசம் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மாங்காய் - 2,
துவரம் பருப்பு - கால் கப்,
பச்சை மிளகாய் - 6,
மிளகு சீரகத் தூள் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தாளிப்பதற்கு :

சீரகம்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்,
நெய் - 1 ஸ்பூன்.

செய்முறை :

* பருப்பை வேகவைத்துக் குழைத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

* மாங்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.

* மாங்காய், பச்சை மிளகாயைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில், மசித்த மாங்காய், பருப்புத் தண்ணீர், மிளகு சீரகத் தூள், உப்பு  போட்டு லேசாகக் கொதிக்கவிடவும். நுரைத்து வந்தாலே போதும்.

* கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

* சூப்பரான மாங்காய் ரசம் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News