லைஃப்ஸ்டைல்

காலி பிளவர் - பாசிப்பருப்பு சூப் செய்வது எப்படி

Published On 2016-11-03 06:38 GMT   |   Update On 2016-11-03 06:38 GMT
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சூப் வகைகளை அடிக்கடி குடிப்பது மிகவும் நல்லது. அந்த வகையில் காலி பிளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காலி பிளவர் - 1
பாசிப்பருப்பு  - 200 கிராம்
வெங்காயம்  - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
பச்சை மிளகாய்  - 10
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்  
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/4  ஸ்பூன்
சீரகம் -   1/2 ஸ்பூன்  
உப்பு - தேவைக்கு
பட்டர் - 1 ஸ்பூன்
எண்ணெய் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - தேவைக்கு

தாளிக்க :

வரமிளகாய் - 5
பட்டை, இலை, மிளகு - சிறிது
எண்ணெய்  - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை :

* காலி பிளவரை சிறிய துண்டுகளாக நறுக்கி சூடு தண்ணீரில் போட்டு வைக்கவும்.

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

* பருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை போட்டு நன்கு வேக விடவும்.

* பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலி பிளவரை சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்).

* காலி பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து அதில் பட்டர் போட்டு பட்டை, இலை, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி, மிளகு தூள் தூவினால் சுவையான காலி பிளவர் சூப் தயார். 

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News