லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

Published On 2016-10-27 05:57 GMT   |   Update On 2016-10-27 05:57 GMT
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - கால் கப்
வெங்காய தாள் - அரை கப்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
கறிவேப்பலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவைகேற்ப

செய்முறை :

* சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்ததாள் விரைவில் வெந்து விடும்.

* ஐந்து நிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

* சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.

* இதை சூடு சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News