லைஃப்ஸ்டைல்

பூண்டு வெங்காய பத்திய குழம்பு

Published On 2016-08-29 05:10 GMT   |   Update On 2016-08-29 05:10 GMT
பூண்டு, வெங்காயம் இருந்தால், அதனை வைத்து பத்திய குழம்பு செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இப்போது பூண்டு வெங்காய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 10
பூண்டு - 12 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க...

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கி வைக்கவும்.

* புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

* வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் சாம்பார் பொடியை சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

* எண்ணெய் பிரிந்த மேலே வரும் போது குழம்பை இறக்க வேண்டும்.

* இப்போது சுவையான பூண்டு வெங்காய குழம்பு ரெடி!!!

* இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

* சளி, ஜலதோஷம் தொல்லை இருப்பவர்கள் இதை செய்து சாப்பிடலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News