பொது மருத்துவம்

சுவையான சட்னி வகைகள்

Update: 2022-08-08 01:30 GMT
  • சாப்பிடும் உணவின் சுவையை அதிகப்படுத்தும் தன்மை சட்னிக்கு உண்டு.
  • சிற்றுண்டி உணவு வகைகளில் சட்னி தவிர்க்கமுடியாதது.

சட்னி வகைகளில் பெரும்பாலானவை சுவையோடு ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் தன்மை கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுபவை.

புதினா சட்னி: கோடை காலத்தில் வயிற்றுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. இதில் வைட்டமின்கள் பி, சி, டி ஆகியவை நிறைந்திருக்கின்றன. வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தையும் எளிமையாக்கும். பசி உணர்வை தூண்ட செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். குமட்டலை போக்கும். உடல் வீக்கத்தை குறைக்க உதவும்.

நெல்லிக்காய் சட்னி: நெல்லிக்காய் கசப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இதனை சட்னியாக தயாரித்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

கொத்தமல்லி சட்னி: எளிதாக தயார் செய்துவிடலாம் என்பதோடு சுவையும் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் சி, கே மற்றும் புரதங்களும் அதிகம் இருக்கின்றன. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். நீரிழிவு நோயாளிகள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை தூண்ட உதவும். வாய்ப்புண் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் கொத்தமல்லி சட்னி சாப்பிடலாம்.

தக்காளி சட்னி: தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்பு குறைவான அளவிலேயே உள்ளது. தக்காளி சட்னி இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும் தன்மை கொண்டது.

வெங்காயம்-பூண்டு சட்னி: வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த சட்னியை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இரத்தத்தில் கொழுப்பை ஒழுங்குபடுத்தும். பக்கவாதம் வராமல் தடுக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இது சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவைக்கும்.

கருவேப்பிலை சட்னி: கறிவேப்பிலை இல்லாமல் எந்த சமையலும் முழுமை பெறாது. இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. உணவுக்கு நறுமணத்தையும், நல்ல சுவையையும் ஏற்படுத்தி கொடுக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆன்டி ஆக்சிடென்டுகள், வயிற்றுப்போக்கு, இரத்தசோகை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இரைப்பை குடல் பிரச்சினையை தீர்க்கவும் உதவும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

Tags:    

Similar News