லைஃப்ஸ்டைல்
சில நேரங்களில் குறிப்பிட்ட உணவை விரும்பி சாப்பிட காரணம்

சில நேரங்களில் குறிப்பிட்ட உணவை விரும்பி சாப்பிட காரணம்

Published On 2020-03-15 04:30 GMT   |   Update On 2020-03-11 08:09 GMT
எந்த உணவுப் பொருள் மீது தீராது ஆசை கொண்டு சாப்பிட வேண்டும் எனத் தோன்றுகின்றதோ அது உடலில் குறிப்பிட்ட தாது உப்பின் குறைபாட்டினை காண்பிக்கின்றது.
சில நேரங்களில் ஏன் எடை கூடுகின்றது? ஏன் சோர்வாக இருக்கின்றது? என்று சிலருக்கு குழப்பமாகக் கூட இருக்கும் உங்கள் வளர் சிதை மாற்றங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இதனை slow metabolism என்பார்கள். நமது உடல் எத்தனை கலோரிகளை சக்தியாக மாற்றுகின்றது என்பதே metabrolism ஆகும்.
இது இல்லாத பொழுது metab olism தாமதப்படுகின்றது. இதன் விளைவாக slow metabolism ஏற்படுகின்றது. இதற்கு காரணம் என்ன? சிலருக்கு ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எனப்படும் கார்டிஸால் அதிகமாக இருக்கலாம். தேவையான அளவு கார்டிஸால் உடலின் கொழுப்பினை எரிசக்தியாக்க உதவும்.

ஆனால் ஒருவர் அதிக மனஉளைச்சல், மனச்சோர்வு, கவலை என தொடர்ந்து இருக்கும் பொழுது உடல் அதிக கார்டிஸாலிசினை ரத்தத்தில் கொடுக்கும். இது கார்போஹைடிரேட், கொழுப்பு, புரதம் என அனைத்தினையும் உடலின் சேமிப்பில் இருப்பதை எடுத்து எரித்து விடும். இதனால் அதிக பசி, எடை கூடுதல் போன்றவை ஏற்படக்கூடும் என்கிறார் ரோகர் ஆடம்ஸ்.

எனவே மன நலம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என்பதனை உணர வேண்டும். அதிக எடை என்பது சர்க்கரை நோய் ஏற்பட காரணம் ஆகின்றது. டாக்டர் ஆடம் அவர்களின் ஆய்வுபடி செல்களை இன்சுலினுக்கு ஏற்ற நிகழ்த்தாத பொழுது ரத்தத்தில் அதிக குளூகோஸ் இருக்கும். இதனை சீர் செய்ய கணையம் மேலும் இன்சுலின் சுரக்க வேண்டி இருக்கும். முடிவு - அதிகம் இன்சுலின், அதிக சர்க்கரை, இரண்டும் சர்க்கரை நோயை அதிகப்படுத்தும். ஆகவே சீரான எடை என்பது மிக அவசியமாகும்.

தைராய்டு பிரச்சினை இருக்கலாம். தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த ஹார்மோன் குறையும் பொழுது ஒருவரது metab olism தாமதப்படும். தைராய்டு ஹார்மோன் குறையும் பொழுது குறைந்த அளவு ஆக்சிஸனே ஒருவரால் எடுத்துக் கொள்ள முடிகின்றது. இதுவே slow olism என்பதற்கு முக்கிய காரணம் ஆகின்றது. எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ உதவி மூலம் இக்குறைபாட்டினை சரி செய்து கொள்ள வேண்டும்.

மாதவிலக்கு நின்ற பிறகு அநேக பெண்கள் கூறுவது எடை காரணமின்றி கூடி உள்ளது என்பது தான். ஈஸ்ட்டிராஜன் ஹார்மோன் மாத விலக்கு நின்ற பிறகு அதிகம் குறைந்துவிடும். இதனை மருத்துவ ஆலோசனை மூலம் அறிவுரைப் பெற்று சரி செய்ய வேண்டும்.

* அதிக தாவர உணவு * Filax Seeds * காபியினை குறைத்தல் * முறையான உடற்பயிற்சி * தியானம் * தேவையான அளவு நீர் குடித்தல் இவைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இதேபோன்று ஆண்களுக்கு வயது கூடும் பொழுது சதைகளின் உறுதி அடர்த்தி குறைந்து கொழுப்பு சத்து கூடுகின்றது. இவர்களும் மருத்துவ அறிவுரை பெற வேண்டும்.

* slow olism ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் முதுமையும் ஆகும்.
* கொழுப்பு இருக்கும் அளவு நமக்கு சதை இல்லாது இருக்கலம். இதனை உடற்பயிற்சி மூலமே சரிசெய்ய முடியும்.
* சில வகை மருந்துகள் slow olism ஏற்பட காரணமாக இருக்கலாம்.
* தேவையான அளவு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம்.

மேற்கூறியவைகளில் கவனம் செலுத்தினால் அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

சில நேரங்களில் நாம் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளினையே சாப்பிடுவோம். உப்பு நிறைந்த சிப்ஸ், சாக்லேட் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவில் எந்த உணவுப் பொருள் மீது தீராது ஆசை கொண்டு சாப்பிட வேண்டும் எனத் தோன்றுகின்றதோ அது உடலில் குறிப்பிட்ட தாது உப்பின் குறைபாட்டினை காண்பிக்கின்றது.

* சாக்லேட் : இது அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மக்னீசியம் குறைபாடு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்தகையோர்

* முந்திரி * பாதாம் * பீட்ருட் * பருப்பு வகைகள் * அத்திப்பழம் * வெண்டைக்காய் * பூசணி விதை * சுரைக்காய் * பசலைகீரை * டர்னிப் * வாழைக்காய்
இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள குறைபாடு நீங்கும்.

* சர்க்கரை : சிலர் அதிகமாக இனிப்புகளை சாப்பிட்ட வண்ணம் இருப்பார்கள். அவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று கீழ் கண்ட குறைபாடுகள் இருப்பின் சரி செய்து கொள்ள வேண்டும்.

குரோமியம் : ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்ய வல்லது.

* ப்ரோகலி * உருளை * பச்சை பீனஸ் முழு தானியம் * பழங்கள்- ஆப்பிள், வாழைப்பழம், கிரேப் ஜூஸ் * பால் சார்ந்த உணவுகள் இவை குரோமியம் குறைபாட்டினை சரிசெய்ய வல்லது.

சல்பர் குறைபாட்டினை வெங்காயம், பூண்டு, சின்ன வெங்காயம், பீன்ஸ், பரோகரி, காலிபிளவர், முட்டைகோஸ், பசலை, மக்கா சோளம், கத்தரி போன்றவை சீர்செய்யும். பாஸ்பரஸ் குறைபாடு : இதனை கடல் உணவு, கொட்டைகள், முழு தானியங்கள், சூரியகாந்தி விதை, பூசணி விதை, பால் சார்ந்த உணவு போன்றவை சரிசெய்ய உதவும்.

டிரிப்டோபேன் குறைபாடு : கொட்டை வகைகள், விதைகள், முட்டை, சோயா, பசலை போன்ற உணவுகள் சரிசெய்யும். ஆக முறையான ஆரோக்யமான உணவுகளை சரியான அளவில் சாப்பிடும் பொழுது அதிக இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வராது. அதிக எண்ணெய், கொழுப்பு உணவு, விரும்புபவர்களுக்கு கால்ஷியம் குறைபாடு இருக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால் கீரை வகைகள் சேர்த்துக் கொள்வதும் மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியம்.

சிலர் ஐஸ் கட்டிகளை அடிக்கடி வாயில் போட்டு மெல்லும் பழக்கம் கொண்டவராய் இருப்பர். இவர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு இருக்கின்றதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிக உப்பு சேர்த்து உண்ணும் விருப்பம் உடையவர்கள் மீன், கொட்டைகள், விதைகள் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைபாடு நீங்கும் பொழுது தேவையில்லாத தவறான உணவு ஆசைகளும் நீங்கும்.

* தேங்காய் எண்ணை பற்றி தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணை ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பினை கொண்டது. இது உடலின் கொழுப்புச் சத்தினை எடுக்கவும் உடலுக்கும், மூளைக்கு வேகமாய் சத்து கிடைக்கவும் உதவுகின்றது. நல்ல கொழுப்பினை கூட்ட உதவுவதால் இருதய நோய் பாதிப்புகள் குறைகின்றன. மறதி நோய், வலிப்பு நோய் இவற்றில் இருந்து தீர்வு பெற தேங்காய் எண்ணை சிறிதளவு அன்றாடம் உணவில் உபயோகிக்கவும் சிபாரிசு செய்யப்படுகின்றது.

* கிருமிகள், பூஞ்ஞை பாதிப்பு இவற்றினைத் தவிர்க்கின்றது.
* அதிக பசி எடுப்பதனை கட்டுப்படுத்துகின்றது.
* தலை முடி, சருமம் இவற்றிற்கு சிறந்த ஊட்டம் அளிக்கின்றது என்பது மருத்துவ ஆய்வுகளின் முடிவாகும்.
Tags:    

Similar News