லைஃப்ஸ்டைல்

முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்

Published On 2018-01-15 03:49 GMT   |   Update On 2018-01-15 03:49 GMT
முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நிரந்தர தீர்வு காண முடியும்.
இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு இல்லாதது, அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நின்று பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

10. கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

1. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

2. வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.

3. குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

4. நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயணித்தால் முதுகுவலி வருவது.
Tags:    

Similar News