லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் முட்டை கோஸ்

Published On 2017-10-18 09:42 GMT   |   Update On 2017-10-18 09:42 GMT
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டை கோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். மேலும் இதன் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.


முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும் மற்றும் இது உருவாகிய காலம் 1000 BC என்று கூறப்படுகிறது. முட்டை கோஸ் இந்தியாவில் பிரபலமான உணவு வகைளில் ஒன்றாகும். FAST FOOD என்று அழைக்கப்படும் இந்த துரித உணவகங்களில் இந்த முட்டை கோஸை பல வகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.

இந்த முட்டை கோஸை இப்படிப்பட்ட உணவகங்களில் சாப்பிடுவதால் எந்த ஒரு பயனும் இல்லை. முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது இதை எந்த அளவுக்கு அடுப்பில் வைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இதன் சத்துக்களை இழந்துவிடும். இந்த உண்மையை அறிந்ததாலோ என்னவோ மேலை நாடுகளில் பெரும்பாலான உணவகங்களில் இந்த முட்டை கோஸ் வகையான உணவுகளை பச்சையாக பரிமாறுகிறார்கள்.

முட்டைகோஸில் வைட்டமின் சி மற்றும் பி உள்ளன. முட்டை கோஸில் உள்ள சல்பர், மற்றும் அயோடின் ஆகியவை வயிறு, குடல் மற்றும் குடற் சவ்வு போன்ற உறுப்புகளை சுத்தப்படுதுகின்றன மற்றும் புண்களை நிவர்த்தி செய்கிறது.

முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன இதனால் மலம் இலகுவாகக் கழிவதுடன் மூலம், பவுந்தரம் போன்ற கோளாறுகள் வராமல் தடுக்கின்றன.

முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.

வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
Tags:    

Similar News