லைஃப்ஸ்டைல்

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் வாழைப்பழம்

Published On 2017-09-09 03:14 GMT   |   Update On 2017-09-09 03:14 GMT
தினமும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து குடலில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
நாம் அதிகம் உண்ணும் பழம், வாழைப்பழம். அன்றாடம் வாழைப்பழம் உண்பது நல்ல விஷயம்தான். அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நமக்கு நன்மை பயக்கும்.

வாழைப்பழத்தின் மேலும் பல நன்மை தரும் விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்...

* தினமும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து குடலில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்தி, பக்கவாதம் மற்றும் ரத்தசோகைப் பிரச்சினை வராமல் வாழைப்பழம் தடுக்கிறது.

* இரைப்பை, வயிற்றில் அதிகம் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப் படுத்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்சினை, வயிற்றுப்புண்களை குணமாக்குகிறது.

* உடலில் சக்தி, நீரிழப்பைத் தடுத்து, உடல் சோர்வைப் போக்கி, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

* தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுவது, ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்து ரத்தசோகை நோயைக் குணமாக்குகிறது.

* பசியைத் தூண்டும் நல்ல பாக்டீரியாக்களுக்கு வாழைப்பழம் நலம் பயத்து, செரிமான சக்தியைக் கூட்டுகிறது, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மூலம் உண்டாகும் வயிற்றுப்புண்களைக் குணமாக்குவதுடன், வயிற்றைப் பாதிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.
Tags:    

Similar News