லைஃப்ஸ்டைல்

ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்

Published On 2017-08-18 08:03 GMT   |   Update On 2017-08-18 08:03 GMT
இதய நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு 32% முப்பது வயதில் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
பொது மருத்துவமனை என்ற வழக்கு மாறி, சிறப்பு மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. கண், இதயம், ஈ.என்.டி, டென்டல், சிறுநீரகம் என தனி தனி சிறப்பு மருத்துவமனைகள் தோன்றி மக்களின் உயிரையும், பணத்தையும் அரித்து எடுத்து வருகின்றன. முன்பெல்லாம் ஸ்ட்ரோக் என்ற வார்த்தையை நாம் கேட்டது கூட இல்லை.

ஆனால், இன்று முப்பதை நெருங்கும் போதே, இதய பாதிப்பு, ஸ்ட்ரோக், மாரடைப்பு, நீரிழிவு என ஓர் பட்டியலே நீள்கிறது. இனி, முப்பது வயதில் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதை வெளிபடுத்தும் அபாய அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.


எந்த காரணமும் இன்றி திடீரென தலைவலி ஏற்படுவது. கடினமான வலியை ஏற்படுத்துவது போன்றவை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பேசும் போது தெளிவின்றி குழைதல் ஏற்படுவது அல்லது பேச முடியாமல் போவது.

ஏதேனும் ஓர் கண்ணில் மட்டும் பார்வை குறைபாடு தென்படுவது. அல்லது மங்கலாக தெரிவது.



கை, கால்களில் திடீரென உணர்வின்றி போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்றவை ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாய அறிகுறிகள் ஆகும்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு 50% சதவீதம் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறதாம். முதன்மை காரணிகளில் முதலிடத்தில் இருப்பது உடல் பருமன் தான். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருந்து நீங்கள் உடல்பருமன் அதிகமாக இருக்கிறீர்கள் என்றால், உடனே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குங்கள்.

புகை மற்றும் மது புகைப்பிடிக்கும் ஆண்கள் மத்தியில் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் 46% சதவீதமும், மது அருந்துவோர் மத்தியில் 22% சதவீதமும் அதிகமான வாய்ப்பு இருப்பதாய் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதய நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு 32% முப்பது வயதில் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

குடும்ப மரபணு சிலருக்கு மரபணு காரணமாக கூட ஸ்ட்ரோக் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் முந்தைய தலைமுறையினருக்கு ஸ்ட்ரோக் இருந்திருந்தால் உங்களுக்கும் ஸ்ட்ரோக் ஏற்பட 8% வாய்ப்புகள் இருக்கின்றன.
Tags:    

Similar News